Latestமலேசியா

ஜாலான் தெங்கு கிளானா போக்குவரத்து நெரிசல்; அனுசரணை காட்டுமாறு மாநகர மன்றத்திடம் கோரிக்கை வைத்த Dr குணராஜ்

கிள்ளான், அக்டோபர்-21, கிள்ளான், ஜாலான் தெங்கு கிளானா லிட்டல் இந்தியா பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, சாலை விதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் அதே வேளை பொது போக்குவரத்துகளைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கலாமென சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Dr குணராஜ் பரிந்துரைத்துள்ளார்.

குறிப்பாக இந்த தீபாவளி பெருவிற்பனை காலத்தில் அங்கு சென்று வர பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்தால் சிறப்பாக இருக்குமென அவர் சொன்னார்.

ஜாலான் போஸ் பாரு பேருந்து நிலையத்திலிருந்தோ அல்லது கிள்ளான் கேடிஎம் இரயில் நிலையத்திலிருந்தோ shuttle பேருந்து சேவை ஏற்படுத்தப்பட்டு, SelangorKu இலவச பேருந்து சேவையை தெங்கு கிளானா வரை தீபாவளி சமயத்தில் மக்கள் பயன்படுத்த வகை செய்யலாம் என கிள்ளான் மாநகர் மன்ற மேயரை அவர் கேட்டுக் கொண்டார் .

அதே சமயம் தெங்கு கிளானா கடை வீதிகளில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் இழுத்துச் செல்லப்படும் விவகாரத்திலும், இயன்ற அளவு அனுசரணையாக நடந்துகொள்ளலாமென, MBDK எனும் கிள்ளான் அரச மாநகர மன்றத்தை அவர் கேட்டுக் கொண்டார்.

சாலையில் double parking செய்வது தவறு தான் என்றாலும், இட நெரிசலில் மக்களும் என்ன தான் செய்வார்கள்.

எடுத்த எடுப்பிலேயே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், வாகனங்களை அப்புறப்படுத்த அவர்களுக்கு ஆலோசனையும் எச்சரிக்கையும் கொடுக்கலாம்.

கொடுக்கப்பட்ட நேரத்தை கடந்தும் சொல் பேச்சு கேட்காதவர்கள் மீது வேண்டுமானால் நடவடிக்கை எடுக்கலாம்.

தீபாவளி குதூகலத்தில் இருப்பவர்களிடம் சற்று அனுசரித்துப் போவதில் தவறில்லை என குணராஜ் கூறினார்.

ஜாலான் தெங்கு கிளானாவுக்கு தீபாவளி ஷாப்பிங் செய்ய வந்தவர்களின் சில வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாகக் கூறி இழுத்துச் செல்லப்பட்ட சம்பவங்கள் குறித்து, பலர் அதிருப்தி தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!