Latestமலேசியா

ஜோகூரில் தீபாவளி இணைவோம் 2.0 கண்காட்சி – ஆட்சிக் குழு உறுப்பினர் ரவின் குமார் தொடக்கி வைத்தார்

ஜோகூர் பாரு, அக் 21 – ஜோகூர் பாரு Sireh Parkகில் புக்கிட் இண்டா இந்திய வர்த்தகர்கள் மற்றும்  இணைவோம் குழு ஏற்பாட்டில்  தீபாவளி வர்த்தக  கண்காட்சி நடைபெற்றது.  ஜோகூர் மாநிலத்தை  சேர்ந்த  60க்கும் மேற்பட்ட வர்த்தகளின் பல்வேறு வர்த்தக பொருட்கள்  காட்சிக்கு  வைக்கப்பட்ட இந்த கண்காட்சியில் கலை மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.  

இந்த நிகச்சியை  ஜோகூர்  மாநில  ..கா தலைவரும் , ஆட்சிக் குழு உறுப்பினரும்  டத்தோ ரவின் குமார் கிருஷ்ணசாமி தொடக்கிவைத்தார்.  இந்த நிகழ்ச்சியில்  பல இனங்களையும் சேர்ந்த ஜோகூர் மக்களின் பாரம்பரிய உணவு வகைகளும், இந்தியர்களின் பாரம்பரிய உடைகளும் விற்கப்படுகின்றனர்.  இந்நிகழ்ச்சிக்கு  வந்த சுற்றுப்பயணிளும்  இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை வாங்கினர்.  தீபாவளி முதல் நாள் வரை நடைபெறும் இந்த  வர்த்தக கண்காட்சியில்  கலந்துகொண்டு பயன் அடையும்படி   பொதுமக்களுக்கு   அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ஜோகூரிலுள்ள  இந்திய சிறு தொழில் வர்த்தகர்களின்  பொருட்களை  அறிமுகப்படுத்தவும் அவர்களது  சந்தை திறனை மேம்படுத்தும் நோக்கத்தில்  இந்தியர்கள் வர்த்தகர்களின்  செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது. 100 ரிங்கிட் கட்டணத்தில் இந்த செயலியில் பதிவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.    இந்த செயலியில்   100  வர்த்தகர்களை  பதிவு செய்வதற்கான கட்டணத்திற்கு உதவுவதற்கும் ரவின் குமார்  முன்வந்தார்.  இந்த  கண்காட்சி எல்லா வகையிலும் சிறப்பாக நடைபெறுவதற்கு  ஒத்துழைப்பு வழங்கிய இஸ்கந்தர் புத்ரி    IPD,  MBIP,  Sireh Park  நிர்வாகம், MKNJ மற்றும் ரேலா தரப்புக்கும்   அவர்  தனது   நன்றியை தெரிவித்துக் கொண்டார்.  

இதனிடையே உள்ளூர் கலைஞர்கள்  கலந்து கொள்ளும் பாடல் போட்டியின் இறுதி போட்டி இம்மாதம்  26ஆம் தேதி நடைபெறும் என்றும்  ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!