கோலாலம்பூர், அக்டோபர் 7 – ஜோகூர், கெடா மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களில் செயல்படும் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, ஜோகூரில் 240 குடும்பங்களைச் சேர்ந்த 808 பேர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி, நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
கெடாவில், கூபாங் பாசு மற்றும் பென்டாங் மாவட்டங்களிலுள்ள மூன்று நிவாரண மையங்களில் தற்போது 100 குடும்பங்களைச் சேர்ந்த 338 பேர் தங்கியிருக்கின்றனர்.
இதேபோல், பேராக் மாநிலத்திலும், 64 குடும்பங்களிலிருந்து, 83 குடும்பங்களைச் சேர்ந்த 304 பேரான எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.
இந்நிலையில், சிலாங்கூரில் நிவாரண மையங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று, இரவு 281 பேராக இருந்த எண்ணிக்கை, இன்று காலையில் 248 பேராக 50 குடும்பங்களுக்குக் குறைந்துள்ளன.