
ஜோகூர் பாரு, ஏப்ரல்-30-பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளை உரிய அனுமதியின்றி வைத்திருந்த ஒருவரை ஜோகூர் பாருவில் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
37 வயது அந்த உள்ளூர் ஆடவர், பொது மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சோதனையில் கைதுச் செய்யப்பட்டார்.
இந்நடவடிக்கை நேற்று இரவு சுமார் 8.45 மணியளவில் பண்டார் ஊடா உத்தாமா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்டது.
சோதனையில், பாதுகாக்கப்பட்ட பல வகை பறவை வகைகள் உள்ளிட்ட 16 பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும், மான் கொம்பாக சந்தேகிக்கப்படும் ஒரு வனவிலங்கு ட்ரோஃபியும் பறிமுதல் செய்யப்பட்டது.
மொத்த மதிப்பு சுமார் 62 ஆயிரம் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரால், இந்த வனவிலங்குகளை வைத்திருக்க எந்தச் சட்டப்பூர்வ அனுமதியும் காட்ட முடியவில்லை.
இச்சம்பவம் 2010 ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து விலங்குகளும் மேல் நடவடிக்கைக்காக PERHILITAN அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.



