Latestமலேசியா

நெகிரி செம்பிலான் முன்கூட்டிய வாக்குப்பதிவில் PN முன்னிலை இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்

நெகிரி செம்பிலான், ஜூலை 29 – நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவில் பெரிக்காத்தான் நேஷனல் (PN) முன்னிலையில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலை மலேசிய தேர்தல் ஆணையம் (EC) திட்டவட்டமாக மறுத்துள்ளது.

காவல்துறையினர், ராணுவத்தினர் மற்றும் அவர்களின் துணைவர்கள் பதிவுசெய்த முன்கூட்டிய வாக்குகள், ஆகஸ்ட் 1ஆம் தேதி மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகே எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எனவே, தற்போது PN முன்னிலையில் இருப்பதாக பரவி வரும் தகவல் மற்றும் தகவல் வரைபடம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என ஆணையம் விளக்கியுள்ளது.

தேர்தல் நடைமுறை சுமுகமாக நடைபெற, உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிர்வதையோ நம்புவதையோ பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்காக மொத்தம் 22,339 பேர் முன்கூட்டியே, நேரடியாக அல்லது அஞ்சல் வழியாக வாக்களித்துள்ளனர். ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவில் 8,67,151 சாதாரண வாக்காளர்கள் 36 சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!