Latestமலேசியா

புத்ராஜெயா அடுக்குமாடித் குடியிருப்பில் அசம்பாவிதம்: கீழே விழுந்ததில் பதின்ம வயது பெண் பலி

புத்ராஜெயா, செப்டம்பர்-13,புத்ராஜெயா Presint 5-சில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததில் 15 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்றிரவு 10.30 மணிக்கு மேல் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், அந்த இளல் பெண்ணைக் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுத்தனர்.

அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை அங்கே வந்த மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர்.

சடலம் சவப் பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

மரணமடைந்த சிறுமி, தனது குடும்பத்தாருடன் ஒன்பதாவது மாடியில் வசித்து வந்ததாகக் கூறியப் புத்ராஜெயா போலீஸ், மேற்கொண்டு தீவிர விசாரணைகளை நடத்தி வருகிறது.

அதோடு மரணத்திற்கான உண்மைக் காரணம் தெரிய வரும் வரை, இச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்பட்டுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!