
கோலாலம்பூர், செப் 13 – ஒரே ஒரு புகைப்படம்… சில விநாடிகளில் 80-களின் ஹீரோ, ஹீரோயின் தோற்றம்! சமூக வலைத்தளங்களில் தற்போது இந்த AI photo trend வேகமாகப் பரவி வருகிறது.
பலரும் தங்களது புகைப்படங்களை AI செயலிகளில் பதிவேற்றி, ரெட்ரோ உடை, சிகை அலங்காரம் மற்றும் பின்னணியுடன் புதிய தோற்றமாக மாற்றிப் பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால், இந்த trend-ல் இணையும் முன் பயனர்கள் கவனமாக இருக்க வேண்டும் என AI மற்றும் இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
AI-க்கு பதிவேற்றப்படும் தெளிவான முகப் புகைப்படங்கள், ஒருவரை அடையாளம் காண உதவும் தனிப்பட்ட தகவல்களாக இருக்கலாம். சில original புகைப்படங்களில் தேதி, பயன்படுத்தப்பட்ட சாதனம் மற்றும் location உள்ளிட்ட metadata-வும் இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளது.
மேலும், பதிவேற்றப்படும் புகைப்படங்கள் எவ்வளவு காலம் சேமிக்கப்படுகின்றன, எந்த நோக்கத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன என்பவை அந்தந்த AI தளத்தின் privacy policy-ஐப் பொறுத்து மாறுபடும்.
முகப் புகைப்படங்கள் தவறான கைகளுக்குச் சென்றால், போலி கணக்குகள், ஆள்மாறாட்டம் அல்லது deepfake போன்ற மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால், AI photo trend-களை பயன்படுத்தும் போது எந்த தளத்தில் புகைப்படம் பதிவேற்றப்படுகிறது, அந்தத் தளம் பயனர்களின் தரவுகளை எவ்வாறு கையாளுகிறது என்பதை அறிந்து செயல்படுவது அவசியம் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
80s look இன்று trend-ஆக இருக்கலாம்; நாளை வேறு ஒரு trend அதன் இடத்தைப் பிடிக்கலாம். ஆனால் இணையத்தில் பகிரப்படும் தனிப்பட்ட தகவல்கள் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பயனர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே நிபுணர்களின் எச்சரிக்கை.



