ஜோகூர் பாரு, செப்டம்பர் -3, ஜோகூர் பாரு அருகே PLUS நெடுஞ்சாலையின் 10.7-வது கிலோ மீட்டரில் காங்கிரீட்டுகளை ஏற்றி வந்த டிரேய்லர் லாரியின் பின்பகுதி தனியாகக் கழன்று, சாலையில் கவிழ்ந்தது.
நேற்று பிற்பகல் வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவத்தால் காங்கிரீட்டுகள் சாலையில் விழுந்தன.
இடப்பக்கச் சாலையை காங்கிரீட்டுகள் மூடியதால், வலப்பக்கச் சாலை மட்டுமே போக்குவரத்துக்குப் பயன்பட்டது.
டிரேய்லர் லாரி ஓட்டுநரான 26 வயது ஆடவருக்கு அதில் காயமேதும் ஏற்படவில்லை என போலீஸ் உறுதிப்படுத்தியது.
வாகனத்தைக் கட்டுப்படுத்தத் தவறி, விபத்து அபாயத்தை உருவாக்கியதன் பேரில் லாரி ஓட்டுநர் விசாரிக்கப்படுகிறார்.