
டில்லி, செப்டம்பர் 9 – கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில், டில்லி ஹரியானா மாநிலத்திலிருக்கும் ஃபரிடாபட் பகுதியில் குளிரூட்டும் பெட்டி (Air Conditioner) திடீரென வெடித்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
அடர்ந்த புகையால் மூச்சுத்திணறி தாய் தந்தை மற்றும் அவர்களின் பெண் குழந்தையும் உயிரிழந்த நிலையில் அவர்களின் மகன் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.
வீட்டின் முதல் மாடியில் இருந்த ஏசி வெடித்ததில் தீ மேல்தளத்திற்கு பரவி, குடும்பத்தினர் சிக்கினர் என்று அறியப்படுகின்றது.
போலீசார் ஏசியின் கோளாறே வெடிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என தெரிவித்திருந்தாலும் தடயவியல் நிபுணர்கள் விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.