புத்ராஜெயா, டிசம்பர்-14, சிலாங்கூர்,டெங்கில், தாமான் ஆயர் ஹீத்தாமில் உள்ள வெளிநாட்டவர்களின் புறம்போக்குக் குடியிருப்பை, குடிநுழைவுத் துறை அதிகாரிகள் சுற்றி வளைத்த போது அனைவரும் தலைத்தெறிக்க ஓடினர்.
நேற்று அதிகாலை 3.30 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட அந்த அதிரடிச் சோதனையின் போது பெரும்பாலோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.
விழித்துக் கொண்டதும் பலர் திரைச்சீலைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டதையும் காண முடிந்தது.
எனினும் 100 பேரை பரிசோதித்த அதிகாரிகள், முறையானப் பயண பத்திரம் இல்லாதது உட்பட பல்வேறுக் குற்றங்களுக்காக 51 பேரைக் கைதுச் செய்தனர்.
18 பெண்கள் உள்ளிட்ட அவர்களில் பெரும்பாலோர் இந்தோனீசிய மற்றும் மியன்மார் நாட்டவர்கள் ஆவர்.
பொது மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சில வாரங்களாக வேவு பார்த்து, குடிநுழைவுத் துறை அச்சோதனையை மேற்கொண்டது.
கைதானவர்கள் மேல் விசாரணைக்காக சிலாங்கூர் குடிநுழைவுத் துறைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.