தஞ்சோங் காராங்கில் தீ விபத்து 6 கடைகள் அழிந்தன

கோலாலம்பூர், ஜூன்-3-தஞ்சோங் காராங்கில் பிரதான சாலைக்கு அருகே, ஒரு பெட்ரோல் நிலையத்தின் முன்பு இருந்த ஆறு கடைகள் நேற்றிரவு நிகழ்ந்த தீவிபத்தில் அழிந்தன.
ஒரு நகைக்கடை, மினி மார்க்கெட், கை தொலைபேசி கடை, தகவல் தொடர்பு உபகரணக் கடை மற்றும் இரண்டு மருந்துக் கடைகளும் தீயில் 90 விழுக்காடு அழிந்தன.
இந்த சம்பவம் குறித்து இரவு மணி 11.27 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை பிரிவின் உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் (Ahmad Mukhlis Mukhtar ) தெரிவித்தார்.
முதலில் ஒரு மாடிக் கடை வளாகத்தில் பிடித்த தீ அடுத்தடுத்து இதர கடைகளுக்கும் பரவியது.
அதிகாலை மணி 3.54 க்கு தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
இந்த தீவிபத்தில் எவரும் காயம் அடையவில்லை. இச்சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அகமட் முக்லில் கூறினார்.



