Latestமலேசியா

பாசீர் மாஸில் சிறு குழந்தையை போதைப்பொருள் பயனீட்டுக்கு உட்படுத்திய தந்தைக்கு RM3,000 அபராதம்

பாசீர் மாஸ், ஜூலை-20-கிளந்தான், பாசீர் மாஸில் 1 வயது 8 மாதம் நிரம்பிய குழந்தையில் உடலில் ஆபத்தான போதைப்பொருட்கள் கண்டறியப்பட்டது தொடர்பில் அதன் தந்தைக்கு sessions நீதிமன்றம் 3,000 ரிங்கிட் அபராதம் விதித்தது. 27 வயதான Mohamad Shahrul Hisham Lailatulazhma தமது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

ஏப்ரல் 4-ஆம் தேதி இரவு Rantau Panjangங்கில் Taman Rantau Mas பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அந்நபர் மகளை ஆபத்தான போதைப்பொருட்களுக்கு ஆட்படுத்தியதாக 2001 குழந்தைகள் சட்டத்ய்தின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அக்குற்றத்திற்கு அதிகபட்சமாக 20,000 ரிங்கிட் அபராதம் அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அவை இரண்டுமே விதிக்கப்படலாம். மேலும், குற்றவாளி நன்னடத்தையுடன் இருப்பதற்கான பிணைப் பத்திரத்தை எழுதிக் கொடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிடலாம்.

அவருக்குப் பொருத்தமான தண்டனையை விதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட நிலையில், தனது மனைவிக்கு வேலையில்லை என்பதால் குடும்பத்தை ஆதரிக்க வேண்டியிருப்பதாகவும் மனம் திருந்தி விட்டதாகவும் கூறி அந்நபர் குறைந்த தண்டனை கோரினார்.

அதனை அடுத்து, நீதிமன்றம் அவருக்கு 3,000 ரிங்கிட் அபராதம் விதித்தது. அபராதம் செலுத்தத் தவறினால் மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

அதோடு அவர் ஓராண்டுக்கு ஓர் உத்தரவாதத்துடன் கூடிய 2,000 ரிங்கிட் மதிப்புள்ள நன்னடத்தைப் பத்திரத்தில் கையெழுத்திடவும், 36 மணிநேர சமூகச் சேவையை முடிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!