Latestமலேசியா

இந்தோனேசியாவில் தரைக்கு மேலும் நிலத்தடியிலும் காட்டுத்தீ – நாசா

இந்தோனேசியா, செப்டம்பர் 4 – இந்தோனேசியாவில் கடுமையான மற்றும் பரவலான வறட்சி காரணமாக தரைப்பகுதி மட்டுமின்றி நிலத்தடியிலும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

குறிப்பாக, வெப்பமண்டல சதுப்பு நிலங்களில் மெதுவாக எரியும் தீயால் அதிகளவு காற்று மாசு ஏற்படுவதுடன், நிலத்தடியில் பரவுவதால் தீயை அணைப்பதும் கடினமாக இருப்பதாக நாசா கூறியது.

நாசாவின் Aqua செயற்கைக்கோள் செப்டம்பர் 1ஆம் தேதி எடுத்த படங்களில் இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் பெரும்பகுதியை புகை சூழ்ந்திருப்பது பதிவாகியுள்ளது. MODIS கருவி மூலம் கண்டறியப்பட்ட வெப்ப அசாதாரணப் பகுதிகள் சிவப்பு புள்ளிகளால் குறிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, காட்டுத்தீ மற்றும் புகைமூட்டம் காரணமாக சில பள்ளிகளில் தொலைதூரக் கல்வி தொடங்கியுள்ளதுடன், சில விமானங்களும் தாமதமடைந்துள்ளன. இந்தப் பிரச்சினையை வறட்சி காலங்களில் மட்டுமல்லாமல் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுச்சூழல் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!