Latestமலேசியா

LRT அம்பாங் பாதை இன்று முதல் தற்காலிக முறையில் இயங்கும்

கோலாலம்பூர், ஜூன்-2–சான் சோ லின் ( Chan Sow Lin ) நிலையம் அருகே கடந்த வாரம் ரயில் தடம்புரண்ட சம்பவத்தைத் தொடர்ந்து, LRT அம்பாங் பாதை இன்று முதல் தற்காலிக இயக்க முறையில் தொடங்கவுள்ளதென என ரேபிட் கேஎல் (Rapid KL) அறிவித்துள்ளது.

புத்ரா ஹைட்ஸ் மற்றும் செந்துல் தீமூர் (Putra Heights dan Sentul Timur) இடையிலான பயணம் வழக்கம்போல் எந்த ரயில் மாற்றமும் இன்றி இயங்கும். எனினும், அம்பாங் – செந்துல் தீமூர் (Ampang dan Sentul Timur) இடையே பயணிப்பவர்கள் சான் சோ லின் நிலையத்தில் ஒரு முறை ரயில் மாற்ற வேண்டும்.

இதனால் உச்ச நேரங்களில் பயண நேரம் சுமார் 5 நிமிடங்கள் அதிகரிக்கலாம்.

பயணிகளின் வசதிக்காக 10 இலவச இடைநிலை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் குழுக்கள் சேதமடைந்த பகுதிகளைச் சீரமைக்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக ரேபிட் கேஎல் தெரிவித்துள்ளது.

கடந்த மே 28ஆம் தேதி, சான் சோ லின் நிலையம் அருகே தட மாற்றுப் பகுதியில் சென்றபோது அம்பாங், ஸ்ரீ பெட்டாலிங் பாதை ரயில் ஒன்று தடம்புரண்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!