Latestமலேசியா

சாலை விபத்தில் உயிரிழந்த தந்தை: “மீண்டும் காரை ஏற்றி கொன்றனர்” என மகன் குற்றச்சாட்டு; நீதி கோரி குடும்பம் உருக்கமான வேண்டுகோள்

நெகிரி செம்பிலான், ஜூலை 18- ரொம்பினில் கடந்த ஜூன் 24-ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் சரவணன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது 16 வயது மகன் ஹஸ்வின் குமார் நூலிடையில் உயிர் தப்பினார். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் முழுமையான விசாரணை கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

லாடாங் கொஃபுவைச் சேர்ந்த ஹஸ்வின், தனது தந்தை சரவணனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கார் ஒன்று மோதியது. முதல் மோதலுக்குப் பிறகு காரில் இருந்த நால்வர் கீழே இறங்கி அவர்களின் நிலையை வந்து பார்த்ததாகவும், பின்னர் தனது தந்தை எழ முயன்றபோது, கார் பின்னோக்கி வந்து மீண்டும் அவர் மீது ஏற்றிவிட்டு தப்பிச் சென்றதாகவும் அவர் கூறுகிறார்.

இந்த விபத்தில் ஹஸ்வினுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனிடையே, தனது தந்தை மீது இரண்டாவது முறையாக கார் ஏற்றப்பட்டது திட்டமிட்ட செயலாக இருக்கலாம் என குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதுடன், குடும்பத்தினரின் தகவலின்படி, இந்த வழக்கு சாலைப் போக்குவரத்து சட்டம் 1987-இன் பிரிவு 41-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு, சந்தேகநபர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே, இந்தச் சம்பவத்தை சாதாரண சாலை விபத்தாகக் கருதாமல், முழுமையாக விசாரித்து சரவணனின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!