Latestமலேசியா

நெகிரி செம்பிலான் தேர்தல்: 36 இடங்களுக்கு 103 வேட்பாளர்கள் போட்டி; 15 இந்திய வேட்பாளர்களும் களத்தில்

சிரம்பான், ஜூலை-18 – வேட்பு மனுத்தாக்கல் இன்று நிறைவடைந்திருப்பதை அடுத்து, 16-ஆவது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், மொத்தமுள்ள 36 இடங்களுக்கு மொத்தம் 103 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்தத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் 36 தொகுதிகளில் தனித்தே போட்டியிடுகிறது.

பாரிசான் நேஷனலும் பாஸ் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலும் தங்களுக்கு இடையிவான அதிகாரப்பூர்வமற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, முறையே 25 மற்றும் 11 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

பெரிக்காத்தானில் தனித்து விடப்பட்டுள்ள பெர்சாத்து கட்சி 24 இடங்களில் தனியாக வேட்பாளர்களை நிறுத்துகிறது.

​முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலரும் களத்தில் உள்ளனர்.

குறிப்பாக, தற்போதைய மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருண் லிங்கி தொகுதியில் பாரிசான் மற்றும் பெர்சாத்து வேட்பாளர்களுடன் மும்முனைப் போட்டியில் குதிக்கிறார்.

DAP பொதுச் செயலாளர் அந்தோணி லோக் சென்னாவிலும் , அம்னோ துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹமட் ஹசான் ரந்தாவிலும் நேரடிப் போட்டியை எதிர்கொள்கின்றனர்.

பாரிசான் சார்பில் 2 இந்தியர்களும், பக்காத்தான் சார்பில் ஐவரும், பெரிக்காத்தான் சார்பில் மூவரும் போட்டியிடுகின்றனர்.

பெர்சாத்து சார்பில் ஜெராம் பாடாங்கில் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் 4 முனைப் போட்டியைச் சந்திக்கிறார்.

​ஜூன் மாதம் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

முன்கூட்டிய வாக்களிப்பு ஜூலை 28-ஆம் தேதியும், தேர்தல் ஆகஸ்ட் 1-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!