Latestமலேசியா

இந்து சங்கத் தேர்தல்; மறுமலர்ச்சி அணியைக் களமிறக்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடும் Dr முரளிதரன்

கோலாலாம்பூர், ஜூலை-17-மலேசிய இந்து சங்கத்தின் 49-ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் வரும் ஜூலை 19, ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது.

சிலாங்கூர், சன்வே முருகன் ஆலயத்தில் நடைபெறும் இவ்வாண்டு பொதுக் கூட்டத்தோடு தலைமைத்துவத் தேர்தலும் நடைபெறுவதால், பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன.

தேசியத் தலைவர் தங்க கணேசன் தலைமையிலான தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக, நடப்பு உச்சமன்ற உறுப்பினரான Dr முனைவர் முரளிதரன் பரமசிவன் தலைமையில் 9 பேருடன் ‘மறுமலர்ச்சி அணி’ போட்டியில் குதித்துள்ளது.

சுகாதார அமைச்சின் மருத்துவ உபகரண மேலாண்மை தலைமை செயல் முறை அதிகாரியுனான முரளிதரன், தமதணியின் இதர வேட்பாளர்களை அறிவித்தார்…

இந்து சங்கத்தில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதை முக்கியக் கொள்கையாகக் கொண்டு இவர்கள் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

தேர்தலில் வெற்றிப் பெற்றால், முதல் 100 நாட்களில் செய்ய வேண்டியத் திட்டங்கள் குறித்த இலக்கு குறித்தும் முரளிதரன் குறிப்பிட்டார்.

அதோடு, ஆலயப் பிரச்னைகளுக்கு ஒரு தீர்வாக, டிஜிட்டல் செயலியைக் கொண்டு வரவும் இந்த மறுமலர்ச்சி அணி உறுதியளித்துள்ளது.

சங்கத்திற்கு உறுப்பியம் முக்கியம் என்ற நிலையில், உறுப்பினர் சந்தா தொடர்பிலும் பதிவு முறையிலும் சட்டத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர இவர்கள் உத்தேசித்துள்ளனர்.

தலைமைத்துவத்தில் இளைஞர்களுக்கு முக்கியப் பதவிகளை வழங்கும் வகையில் புதுமைகளைக் கொண்டு வருவதோடு, பெண்களுக்கு வழிகாட்டியாக அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் திட்டமும் மறுமலர்ச்சி அணிக்கு உண்டு.

இந்து பிள்ளைகளுக்கு உபகாரச் சம்பளம் வழங்குவது உள்ளிட்ட உருமாற்றத் திட்டங்களையும் முன்வைத்து இவர்கள் களம் காண்கின்றனர்.

இப்படியாக பல்வேறு மாற்றங்களை வாக்குறுதிகளாகக் கொண்டு தேர்தலைச் சந்திக்கும் Dr முரளிதரனின் ‘மறுமலர்ச்சி அணி’ பேராளர்களின் பேராதவோடு வெற்றிப் பெற நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.

இரு அணிகளும் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால், ஞாயிற்றுக் கிழமைத் தேர்தல் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!