Latestமலேசியா

தமிழக முதல்வர் விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் அன்வார்; செப்டம்பரில் சந்திக்க உத்தேசம்

கோலாலம்பூர், மே 22 — தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யுடன் இன்று தொலைபேசியில் உரையாடி நலம் விசாரித்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தமிழக மக்களுக்காக அவர் தற்போது ஏற்றுள்ள மிகப்பெரிய பொறுப்பிற்காக மீண்டும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அப்போது, வரும் செப்டம்பரில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்கவுள்ளதாகவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளதாகவும் அன்வார் தெரிவித்தார்.

“வாய்ப்பு கிடைத்தால் தமிழ்நாட்டிற்கும் குறுகிய வருகை மேற்கொள்ள விரும்புகிறேன்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தமிழக மக்களின் நலனுக்காகவும், மாநிலத்தின் சிறப்பான எதிர்காலத்திற்காகவும் முதலமைச்சர் விஜய் தொடர்ந்து வலிமையுடனும் ஞானத்துடனும் செயல்பட இறைவன் அருள் புரிய வேண்டும் என்றும் அன்வார் வாழ்த்தினார்.

இந்த உரையாடல், மலேசியா – தமிழ்நாடு உறவின் நெருக்கத்தையும், தமிழகத்தின் புதிய தலைமையின்மீது மலேசிய தலைமைத்துவம் கொண்டிருக்கும் அக்கறையையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!