Latestமலேசியா

தவணை முடியும் வரை சிலாங்கூர் மந்திரி பெசாராகத் தொடருவேன்; வதந்திகளுக்கு மத்தியில் அமிருடின் அறிவிப்பு

ஷா ஆலாம், டிசம்பர்-15,ஐந்தாண்டு பதவிக் காலம் முடியும் வரை சிலாங்கூர் மந்திரி பெசாராக தாம் நீடிக்கவிருப்பதாக டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி (Datuk Seri Amirudin Shari) கூறியிருக்கிறார்.

பொருளாதார மற்றும் ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மையை உறுதிச் செய்ய, சிலாங்கூர் சுல்தானின் அறிவுரைக்கு ஏற்ப தாம் அப்பதவியில் நீடிப்பதாக, சுருக்கமாக வெளியிட்ட அறிக்கையொன்றில் அவர் சொன்னார்.

2026-ல் முழுமைப் பெறும் என எதிர்பார்க்கப்படும் இரண்டாவது சிலாங்கூர் திட்ட (Second Selangor Plan) முன்வரைவு இடையில் பாதிக்கப்படக் கூடாது;

எனவே தமது தலைமையில் மாநில அரசு தொடருமென்றார் அவர்.

தாம் மத்திய அமைச்சராகவும், தமக்குப் பதிலாக அம்னோவின் தெங்கு சா’ஃவ்ருல் அசிஸ் (Tengku Zafrul Aziz) சிலாங்கூர் மந்திரி பெசாராகவும் பதவியேற்கவிருப்பதாக சில நாட்களாகவே உலா வரும் வதந்திகளுக்கு மத்தியில், அமிருடினின் அறிக்கை வெளியாகியுள்ளது.

முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சராக உள்ள தெங்கு சாஃவ்ருலின் செனட்டர் பதவிக் காலம் முடிவடைவதால், அவரால் மத்திய அமைச்சராகத் தொடர முடியாது.

எனவே, அவரை சிலாங்கூர் மந்திரி பெசாராக்கி விட திட்டமிடப்பட்டுள்ளது;

அதோடு அவரை PKR கட்சியில் இணைத்துக் கொள்ளவும் வேலைகள் நடப்பதாகப் பேசப்பட்டு வருகிறது.

முன்னதாக இது குறித்து அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடியிடம் கேட்கப்பட்ட போது, தெங்கு சா’ஃவ்ருல் கட்சி மாறுவது எதுவும் தமக்குத் தெரியாது என்றார்.

சா’ஃவ்ருல் தரப்பிலிருந்து இதுவரை கருத்தேதும் வரவில்லை

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!