
தாப்பா – ஜூலை 15 – நேற்றிரவு, வடக்கு தெற்கு விரைவுச்சாலையின் 316.9 கிலோ மீட்டர் தூரத்தில் நடந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
வாகன ஓட்டுநர் திடீரென பாதை மாறி வந்த லாரியை தவிர்க்க முயன்று, வேக கட்டுப்பாட்டை இழந்து வாகனம் ஓட்டியதால் இச்சம்பவம் நிகழ்ந்தது என்று தாப்பா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஜோஹாரி யஹ்யா தெரிவித்துள்ளார்..
கோலாலம்பூரிலிருந்து பினாங்கிற்கு பயணம் மேற்கொண்ட சீனாவைச் சேர்ந்த அந்த இரண்டு பயணிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்றும் 56 வயது மதிக்கத்தக்க வாகன ஓட்டுனருக்கு கையில் மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளதென்றும் அறியப்படுகின்றது.
இந்த வழக்கு, சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிலையில் கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்தின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.