பேங்கோக், அக்டோபர்-5 – தாய்லாந்தின் சியாங் மாயில் (Chiang Mai) ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 117 யானைகள் காப்பாற்றப்பட்டன.
வெள்ளத்தில் சிக்கிய மேலும் 9 யானைகளை மீட்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக, அந்நாட்டுத் துணைப் பிரதமர் சொன்னார்.
“எத்தனை யானைகள் தாக்குப் பிடிக்கும் எனத் தெரியவில்லை; ஆனால் திரும்பி வந்து அனைத்தையும் காப்பாற்ற முயலுவோம்” என்றார் அவர்.
பன்றிகள் மற்றும் எருமைமாடுகள் இதற்கு முன் இடம் மாற்றப்பட்ட பண்ணைத் தோட்டங்களிலும் வெள்ளம் புகுந்துள்ளது.
அவற்றை மீட்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நெஞ்சளவு வெள்ளத்தில் சிக்கிய யானைகள் சத்தமாக பிளிரிக் கொண்டு ஓடும் வீடியோக்கள் முன்னதாக வைரலாகி கவலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
யானைகள், தாய்லாந்தின் தேசிய விலங்குகள் ஆகும்.