சியோல், டிசம்பர்-30, தென் கொரிய விமான விபத்தில் 179 பேர் பலியானதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இருவர் மட்டுமே அதில் உயிர் தப்பினர்.
ஒருவர் பயணி, இன்னொருவர் விமானப் பணியாளர்.
இந்நிலையில் சம்பவ இடத்தை, சிறப்பு பேரிடர் பகுதியாக தென் கொரிய இடைக்கால அதிபர் அறிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்ட Choi Sang-mok, அவர்கள் இதிலிருந்து மீள தன்னால் ஆன அனைத்தையும் அரசாங்கம் செய்யுமென்றார்.
அதோடு இது போன்ற விபத்துகள் இனியும் நடக்காமலிருக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் உறுதியளித்தார்.
181 பேருடன் தாய்லாந்தின் பேங்கோக்கிலிருந்து புறப்பட்டு வந்த அந்த Jeju Air விமானம், நேற்று காலை தென்மேற்கில் உள்ள மூவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது வெடித்துச் சிதறியது.
தரையிறங்கும் முன்பாக பறவைகளுடன் மோதியதால், விமானத்தின் கியரில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்குக் காரணமென பரவலாகக் கூறப்படுகிறது.
எனினும், அது இன்னமும் விசாரணையிலிருப்பதாக Jeju Air பேச்சாளர் சொன்னார்.