Latestமலேசியா

தேசிய ஒற்றுமை அமைச்சின் ஏற்பாட்டில் சரவாக் வரலாறு குறித்த சொற்பொழிவு

தேசிய ஆவணக்காப்பகத்தின் வாயிலாக தேசிய ஒற்றுமை அமைச்சு, சரவாக் மாநில ஆளுநர் Tun Pehin Sri Dr. Haji Wan Junaidi bin Tuanku Jaafar பங்கேற்ற Syarahan Negarawan நிகழ்வை Wisma Sejarahவில் ஏற்பாடு செய்திருந்தது.

அந்நிகழ்வில் நிர்வாகிகள், அரசு ஊழியர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சரவாக் வரலாறு தொடர்பான தனது அனுபவங்கள், கருத்துகள் மற்றும் வரலாற்றுப் பார்வைகளை Wan Junaidi பகிர்ந்து கொண்டார்.

1964 ஆம் ஆண்டு ராயல் மலேசியக் காவல்துறையில் பணியைத் தொடங்கிய Wan Junaidi, 1968 முதல் 1973 வரை காவல்துறை களப் படையில் பணியாற்றியதுடன், சரவாக்கில் கம்யூனிச அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். அந்த அனுபவங்கள் அவரது ‘A Policeman’ என்ற நூலில் இடம்பெற்றுள்ளன.

இவ்வேளையில் அந்நிகழ்வில் உரையாற்றிய தேசிய ஒற்றுமை அமைச்சர் Dato Sri Aaron Ago Dagang, வரலாற்றைப் புரிந்து கொள்வது தேசிய அடையாளத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் என்றார். தேசிய ஆவணக்காப்பகம் நாட்டின் நினைவுகளைப் பாதுகாப்பதுடன், வரலாற்றை தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மலேசிய தேசிய ஆவணக் காப்பகத்தின் சரவாக் கிளையின் பொன்விழாவையொட்டி, 2026 சரவாக் வரலாறு குறித்த சர்வதேச மாநாடு செப்டம்பர் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து Syarahan Negarawan மற்றும் 56ஆவது மலேசிய வரலாறு தொடர்பான நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. UNIMAS, சரவாக் மாநில நூலகம் உள்ளிட்ட அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற அந்நிகழ்ச்சிகளின் நோக்கம், வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து தலைமுறைகளிடையே இணைப்பை ஏற்படுத்துவதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!