கோலாலம்பூர், ஜனவரி-4, பிப்ரவரி 11-ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள பத்துமலை தைப்பூத்தை முன்னிட்டு, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் ஆற்றங்கரையை சுத்தம் செய்யும் பணிகளைத் தொடக்கியுள்ளது.
தேவஸ்தானத் தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா இன்று நேரில் சென்று அப்பணிகளைப் பார்வையிட்டார்.
ஆற்றங்கரையின் சுற்றுப் புற குப்பைகளை சுத்தப் படுத்துதல் மற்றும் மண் கழிவுகளைத் தூர்வாரும் பணிக்கான ஏற்பாடுகளையும் அவர் செய்தார்.
லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் பத்து மலையில் குடிநீர், தண்ணீர், மின்சாரம் போன்ற பிற வசதிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
தைப்பூசத்திற்கு ஒரு மாதத்திற்கும் மேலான கால அவகாசம் இருந்தாலும், தை மாதம் பிறந்தவுடனேயே ஏராளமான பக்தர்கள் காவடிகள் மற்றும் பால்குடங்களை ஏந்தி தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தத் தொடங்கி விடுவர்.
எனவே, பக்தர்களின் வசதிக்காக இந்த முன்னேற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.