Latestமலேசியா

தைவான் பெண்ணின் மரணத்தில் ரேப் பாடகர் Namewee சம்பந்தப்பட்டதற்கு ஆதாரம் இல்லை

கோலாலம்பூர், நவ 13- தைவான் பெண் மரணத்தில் வலுவான ஆதாரம்
இல்லையென்பதால் பிரபல ரேப் பாடகர் Namewee போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்படுவார்.

கடந்த மாதம் தலைநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் மரணம் அடைந்த சமூக வலைத்தளத்தில் பிரபலமாக திகழ்ந்த தைவானின் ( Hsieh Yun Hsin ) என்ற அந்த பெண்ணின் மரணத்தில் ,சர்ச்சைக்குரிய பாடகரும் இயக்குநருமான Namewee சம்பந்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதை சட்டத்துறை தலைவரின் அலுவலகம் உறுதிப்படுத்தியது.

போலீஸ் சமர்ப்பித்த விசாரணை அறிக்கையை முழுமையான ஆராய்ந்த பின் 42 வயதுடை Namewee யை இன்று விடுவிப்பார்கள் என சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் டுசுக்கி மொக்தர் ( Mohd Dusuki Mokhtar ) தெரிவித்தார்.

எனினும் விசாரணை இன்னும் நடைபெற்று வருவதால் புதிய ஆதாரங்கள் கிடைத்தால் அந்த பாடகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்டவருடன் இருந்த கடைசி நபர் Namwee என்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து , விசாரணைக்கு உதவுவதற்காக நவம்பர் 5 ஆம் தேதி முதல் அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!