Latestமலேசியா

தொடரும் Op Global சோதனை; புதிதாக 155 பேர் கைது, 186 பேர் மீட்பு

கோலாலம்பூர், செப்டம்பர் -22, பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள குளோபல் இக்வான் நிறுவனத்திற்கு எதிரான Op Global சோதனையில் புதிதாக 155 பேர் கைதான வேளை, 186 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று காலை முதல் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது கைதானவர்களில் 77 பெண்களும் அடங்குவர் என தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹூசாய்ன் (Tan Sri Razarudin Husain) தெரிவித்தார்.

குளோபல் இக்வான் நிறுவனத்துடன் தொடர்புடைய சமயப் பள்ளிகள், கிளினிக்குகள், வணிக வளாகங்களில் அச்சோதனை நடத்தப்பட்டது.

முறைத் தவறிய சமய போதனை தொடர்பான கையேடுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக IGP சொன்னார்.

அதே சமயம் மீட்கப்பட்ட சிறார்கள் மற்றும் பதின்ம வயதினரில், பிரம்பால் அடிக்கப்பட்டு வைரலான சிறுவனும் அடங்குவான்.

கைதானவர்கள், சிறார் துன்புறுத்தல், அலட்சியம், குழந்தை கடத்தல் உள்ளிட்ட புகார்களுக்ளாக விசாரிக்கப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!