Latestமலேசியா

நானூறு B40 குடும்பங்களுக்கு ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரின் தீபாவளி பரிசுக் கூடைகளும் அன்பளிப்பும்

ஜெலுத்தோங், அக்டோபர்-13-பினாங்கு ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் சேவை மையத்தின் ஏற்பாட்டில் தீபாவளி பரிசுக்கூடை அன்பளிப்பும் விருந்துபசரிப்பும் இனிதே நடைபெற்றது.

ஜெலுத்தோங், பத்து லான்ச்சாங் சமூக நல மண்டபத்தில் சனிக்கிழமை மாலை அந்நிகழ்வு நடந்தேறியது.

அதில் DAP தேசியத் தலைவர் லிம் குவான் எங், பினாங்கு மாநில இரண்டாவது துணை முதலமைச்சர் ஜக்டீப் சிங் டியோ உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர்.

ஜெலுத்தோங் வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 400 வசதி குறைந்த B40 குடும்பங்களுக்கு தீபாவளி பரிசுக் கூடைகளும் அன்பளிப்பும் வழங்கப்பட்டன.

அவர்களும் தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாட அந்த பரிசுக் கூடைகளும் அன்பளிப்பும் உதவியாக இருக்குமென, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!