
போர்ட்டிக்சன், ஜூலை-27-நெகிரி செம்பிலானில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரை டேங்கர் லாரி உரசி அந்த கனரக வாகனத்தின் சக்கரம் காலின் மீது ஏறியதில் அவர் பலத்த காயமடைந்தார். அச்சம்பவம் Jalan Seremban-Port Dickson சாலையின் 4.5-வது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
சம்பவத்தின் போது அந்த 34 வயதான பெண், போர்ட்டிக்சன் பகுதியிலிருந்து Lukut நோக்கி குழுவொன்றுடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்பெண் இடதுபுறச் சாலையிலிருந்து நடுப் பகுதி பாதைக்குத் திரும்பியதாகவும், அச்சமயத்தில் 55 வயதான ஓட்டுநர் செலுத்திய லாரி தவிர்க்க முடியாமல் சைக்கிளின் வலது பக்கத்தில் மோதியதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அப்போது அந்த கனரக வாகனத்தின் டயர்கள் அவரின் இடது காலின் மீது ஏறியதாக போர்ட்டிக்சன் மாவட்டக் காவல் தலைவர் Superintendan Maslan Udin தெரிவித்தார்.
பலத்த காயமுற்ற அப்பெண் போர்ட்டிக்சன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அச்சம்பவம் 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



