Latestமலேசியா

RM8 மில்லியன் பிணைத் தொகை: தொழிலதிபரைக் கடத்திய குற்றச்சாட்டை மறுத்த ஆறு ஆடவர்கள்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை-27- இரு வாரங்களுக்கு முன் தொழிலதிபர் ஒருவரைக் கடத்தி, 8 மில்லியன் ரிங்கிட் பிணைத் தொகை கோரியதாகத் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆறு ஆடவர்கள் மறுத்திருக்கின்றனர்.

பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்தில் மூன்று இந்தியர்கள் உட்பட ஆறு பேர் மீது குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

இம்மாதம் 16 ஆம் தேதி மாலை 5.15 மணியளவில் Dataran Sunwayயில் உள்ள Nasi Kandar உணவகமொன்றில், 8 மில்லியன் ரிங்கிட் பிணைத் தொகை கோரும் நோக்கில் இன்னும் பிடிபடாமல் இருக்கும் ஏழு நபர்களுடன் சேர்ந்து அவர்கள் 44 வயதான Chui Kok Mun என்பவரைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

1961-ஆம் ஆண்டு கடத்தல் சட்டம், தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும், கசையடியும் விதிக்கப்படலாம்.

மனைவியும் குழந்தைகளும் உள்ளனர், குடும்பத்தைக் காப்பாற்றும் ஒரே நபர் என பல்வேறு காரணங்கள் முன் வைக்கப்பட்டு உத்தரவாதத்தின் பேரில் அவர்களை விடுவிக்க அனுமதி கோரப்பட்டது. எனினும் குற்றம் சாட்டப்பட்ட எவரையும் உத்தரவாதத்தில் விடுவிக்க முடியாது என நீதிபதி தீர்ப்பளித்தார். அவ்வழக்கு செப்டம்பர் 11 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

பிணைத் தொகைக் கோரிய கடத்தல் கும்பலொன்றிடம் இருந்து ஆடவர் ஒருவர் காவல்துறையினரால் மீட்கப்பட்டதாக கடந்த 18 ஆம் தேதி செய்திகள் வெளியாகியிருந்தன.

ஷா ஆலாமில் உள்ள குடியிருப்புப் பகுதியொன்றில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது அந்நபர் மீட்கப்பட்டதாக Bukit Aman குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குனர் டத்தோ எம். குமார் அத்தகவலைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!