புத்ரா ஜெயா, நவ 22 – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு
( Benjamin Netanyahu) எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட் நீதிக்காகவும் மனிதநேயத்திற்காகவும் போராடுபவர்களுக்கு கிடைத்த வெற்றி என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். இந்த முடிவு பாலஸ்தீனத்தில் மக்கள் படும் இன்னல்களை குறைக்கும் என்று அவர் கூறினார். அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) முடிவு நியாயமானது என்பதோடு , சட்டம், அடக்குமுறை, கொடுமை மற்றும் நடந்துகொண்டிருக்கும் படுகொலைகள் ஆகியவற்றின் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது என அன்வார் வருணித்தார்.
இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். அவர் வெளிநாடுகளுக்கு எந்தவொரு வருகை மேற்கொண்டாலும் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்பதையும் எற்கிறோம். அனைத்துலுக குற்றவியல் நீதிமன்றம் என்பது சட்டம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவெடுக்கும் ஒரு அமைப்பாக இருப்பதால், இது எல்லா நேரத்திலும் என்ன நடக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. இன்று புத்ரா ஜெயா, பிரசிண்ட் 9 இல் உள்ள அல்-ஹுஸ்னா Surau வில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்டபின் அன்வார் இத்தகவலை வெளியிட்டார்.