காத்மண்டு, செப்டம்பர் 30 – நேப்பாளம் முழுவதும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 170ஆக எட்டியுள்ளது என அந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், 42 பேரை காணவில்லை என்பதால், அவர்களை தேடும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நேப்பாளத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
இதுவரை 3000க்கு மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
கடந்த இரண்டு தினங்களாக பெய்த கனமழை காரணமாக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதில், வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளன.
இந்நிலையில், மூன்று வாகனங்கள் நிலச்சரிவில் புதைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், அதில் ஏறக்குறைய 35 பேர் உயிரிழந்திருக்கலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் படையினர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களின் உடல்களை மீட்டு வருகின்றனர்.