பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 8 – பங்சாரில் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்த 78 வயது பாட்டியிடமிருந்து கைப்பை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று, காலை 6:30 மணி வாக்கில், மோட்டார் சைக்கிளில் வந்த திருடன் ,அவரது கைப்பையைப் பறித்துச் செல்வதை சிசிடிவி காட்சியின் வாயிலாக, காணமுடிகிறது.
இதனால், அவர் சாலையில் விழுந்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பிரிக்ஃபீல்ட்ஸ் காவல்துறை தலைவர் மஷாரிமான் (Mashariman) தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின் 394வது பிரிவின் கீழ், காவல் துறை இச்சம்பவம் தொடர்பாக விசாரணையைத் துவக்கியுள்ளது.