கோலாலம்பூர், நவம்பர்-24,கோலாலம்பூர், ஜாலான் பந்தாய் டாலாமிலிருந்து ஜாலான் பந்தாய் பாரு நோக்கிச் செல்லும் ஜாலான் கெரின்ச்சியில், கோர விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் கைதாகியுள்ளார்.
சனிக்கிழமை காலை நிகழ்ந்த அச்சம்பவத்தில், சாலையோரக் கட்டுமானப் பகுதியிலில் அந்த லாரி ஓட்டுநர் பிரேக் எண்ணெயை நிரப்பிக் கொண்டிருந்தார்.
அப்போது சொந்தமாகத் திடீரென பின்னோக்கி நகர்ந்த லாரி, பாதுகாப்பு வேலியை இடித்து விட்டு சாலைக்குள் புகுந்தது.
அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிளை லாரி இடித்ததில், 32 வயது ஆடவர் லாரியின் வலது டயருக்கடியில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பக்கத்திலிருந்த காரையும் லாரி மோதியதில், அதன் ஓட்டுநர் நெற்றியில் காயமடைந்தார்.
இந்நிலையில் 32 வயது லாரி ஓட்டுநர் விசாரணைக்காகக் கைதாகியுள்ளார்.
சம்பவ வீடியோ முன்னதாக வைரலாகி வலைத்தளவாசிகளிடமிருந்து பல்வேறு கருத்துகளைப் பெற்றது.