Latestமலேசியா

பத்து ஃபெரிங்கியில் இணையக் காதல் மோசடி; 20 வெளிநாட்டினர் கைது

ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-25-பினாங்கின் பத்து ஃபெரிங்கியிலுள்ள தங்கும் விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், இணையக் காதல் மோசடி கும்பலைச் சேர்ந்த 20 வெளிநாட்டு ஆடவர்களைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.

​19 முதல் 41 வயதுக்குட்பட்ட இந்த சந்தேக நபர்கள், ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் கைதானதாக தீமோர் லாவோட் மாவட்டப் போலீஸ் தலைவர் Abdul Rozak Muhammad தெரிவித்துள்ளார்.

​முதற்கட்ட விசாரணையில், இக்கும்பல் டெலிகிராம் செயலி வாயிலாக சீனாவைச் சேர்ந்த நபர்களைக் குறிவைத்து காதல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

​சோதனையின் போது ஏராளமான கைப்பேசிகள், மடிக்கணினிகள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

​மோசடி மற்றும் குற்றச் சதித் திட்டப் பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், கைதான 20 பேரும் வியாழக்கிழமை வரை 4 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!