Latestஇந்தியா

வென்டிலேட்டர் வெடித்ததால் மகாராஷ்ட்ரா அமராவதி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து: 3 பச்சிளம் குழந்தைகள் பலி

மும்பை, ஆகஸ்ட்-25-இந்தியாவின் மகாராஷ்ட்ரா மாநிலம் அமராவதியில் உள்ள மாவட்ட அரசு மகளிர் மருத்துவமனையின் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU) ஏற்பட்ட தீ விபத்தில், 3 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன.

​திங்கட்கிழமை அதிகாலை சுமார் 3.30 மணியளவில் மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் உள்ள வார்டில் செயற்கை சுவாசக் கருவியான Ventilator-ரில் ஏற்பட்ட வெடிப்பு அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இத்தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

​தீ ஏற்பட்டபோது அந்தப் பிரிவில் இருந்த 39 குழந்தைகளில் 36 குழந்தைகள் மருத்துவமனை ஊழியர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.

அவர்களில் 6 குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன.

​இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள மகாராஷ்ட்ரா முதல்வர், உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!