
பத்து காவான், மார்ச்-26-3 நாட்கள் தேடுதல் பணிகளுக்குப் பிறகு இரண்டாவது பினாங்கு பாலத்திற்கு அடியில் ஓர் ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பத்து காவானிலிருந்து தீவை நோக்கிச் செல்லும் பாதையின் 12.8-ஆவது கிலோ மீட்டரில் அச்சடலம் மிதந்துகொண்டிருந்ததை, PLUS ரோந்து போலீஸார் கண்டுபிடித்து தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தீயணைப்பு மீட்புத்துறை சடலத்தை மீட்டு மேல் நடவடிக்கைக்காக போலீஸிடம் ஒப்படைத்தது.
முன்னதாக, அப்பாலத்தில் காரொன்று கைவிடப்பட்ட நிலையில் இருந்தது திங்கட்கிழமை கண்டறியப்பட்டது.
அருகில் ஒரு MyKad அடையாள அட்டையும் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து, அந்தக் காரோட்டியைத் தேடி கண்டுபிடிக்க தீயணைப்பு மீட்புக் குழுவோடு, கடல் போலீஸ், பொது தற்காப்புப் படை, தன்னார்வலர் குழு ஆகியவை களத்தில் இறங்கின.



