
கோலாலம்பூர், மார்ச்-26-பயங்கரவாத கும்பல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பதின்ம வயது இளைஞர்கள் அண்மையில் கைதுச் செய்யப்பட்ட விவகாரத்தில், அனைத்து SOP நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பை உறுதிச் செய்யும் நோக்கில், சட்டப்படி மற்றும் தொழில்முறை ரீதியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
இளைஞர்களிடையே பயங்கரவாத சிந்தனைகள் பரவுவதைத் தடுக்க உளவுத்தகவல் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே, இவ்விவகாரத்தில் தேவையற்ற யூகங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தல்களையும் கட்டுப்படுத்த அதிகாரிகள் உறுதியோடு செயல்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.
இளைஞர்களை பயங்கரவாதத்திலிருந்து காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு முயற்சிகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.
பயங்கரவாத சிந்தனைக்கு புத்துயிர் கொடுக்க முயன்றதன் பேரில், 16 முதல் 21 வயதுக்குட்பட்ட 6 சந்தேக நபர்களை மார்ச் 6-ஆம் தேதி போலீஸ் கைதுச் செய்தது.
அவர்களில் மூவர் வயதுக் குறைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



