ஜோகூர் பாரு, நவம்பர்-6 – நாட்டில் பருவமழைக் காலம் தொடங்கியிருப்பதால் காய்கறிகளின் விலை 20-திலிருந்து 30 விழுக்காடு வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழைக்காலத்தில் பாதிக்கப்படும் மாநிலங்களில் காய்கறிகள் கையிருப்பு 15 விழுக்காடு வரை சரியலாமென்பதே அதற்குக் காரணம் என, மலேசியக் காய்கறிகள் பயிரிடுவோர் சம்மேளனத்தின் தலைவர் Lim Ser Kwee கூறினார்.
தொடர் அடைமழையின் போது பயிர்கள் நாசமாகும் என்பதோடு, தாழ்வானப் பகுதிகளிலுள்ள விவசாயத் தோட்டங்களும் நிலங்களும் வெள்ளத்தால் பாதிப்படையலாம் என்றார் அவர்.
ஆனால் நடப்பில் காய்கறிகளின் விலைகள் சற்று மலிவாகவே இருப்பதால், விலை உயர்வு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடாதென Ser Wee உத்தரவாதமளித்தார்.
அதோடு, கேமரன் மலையில் அண்மையில் நிறைய விவசாயத் தோட்டங்கள் திறக்கப்பட்டிருப்பதால், இந்த பருவமழைக் காலம் காய்கறி கையிருப்பில் மோசமானத் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே தாம் நம்புவதாக அவர் சொன்னார்.
மழைக்காலத்தில் விவசாயத் தோட்டங்கள் அதிகம் பாதிக்கப்படுவது தாழ்வான நிலப்பரப்பைக் கொண்ட ஜோகூர், மலாக்கா, பேராக், பினாங்கு போன்ற மாநிலங்களில் தான் என்றார் அவர்.