Latestமலேசியா

பலரின் மனங்களைத் தொட்ட கருணைமிகு பெண்மணி டாக்டர் சித்தி ஹஸ்மா அலி 100-வது வயதில் காலமானார்

பெட்டாலிங் ஜெயா-முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட்டின் துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மா அலி இன்று தனது 100ஆவது வயதில் காலமானார்.

காலை 9.25 மணியளவில் தேசிய இதயக் கழகத்தில் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவரான டாக்டர் ஹஸ்மா, பிரதமரின் துணைவி என்ற தமது தளத்தைப் பயன்படுத்தி தாய் மற்றும் குழந்தைகள் நலம், குடும்பக் கட்டுப்பாடு, கல்வியறிவு, போதைப்பொருள் தடுப்பு, மனநலம் உள்ளிட்ட விவகாரங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மகாதீரும் ஹஸ்மாவும் 1947ஆம் ஆண்டு சிங்கப்பூரில் மருத்துவம் பயின்றபோது சந்தித்தனர். 1956ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட அவர்களுக்கு மரினா, மிர்ஸான், மொக்ஸானி, முக்ரிஸ் என நான்கு பிள்ளைகள் உள்ளனர். மேலும், மூன்று பிள்ளைகளைத் தத்தெடுத்து வளர்த்தனர்.

1955ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்த ஹஸ்மா, மலாய் சமூகத்தின் முதல் பெண் மருத்துவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். பல்வேறு நல அமைப்புகளிலும் தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு மார்பகக் கட்டியை அகற்றும் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர், பெண்கள் முறையான உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!