
கோலாலம்பூர், ஜூன் 11- கெந்திங் ஹைலேண்ட்ஸில் விடுமுறையில் இருந்தபோது பலுன் விற்பனையாளர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து புகாரளிப்பற்கு முன்வரும்படி டிக்டோக் உள்ளடக்க படைப்பாளரை போலீசார் கேட்டுக்கொண்டனர். டிக்டோக் கணக்கு உரிமையாளர் ஒருவர் நேற்று கூறியிருந்த இக்குற்றம் குறித்து போலீசிற்கு இன்னும் புகார் கிடைக்கவில்லை என்று பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஹாம் முகமட் கஹார் ( Zaiham Mohd Kahar ) தெரிவித்தார். பல இடங்களில் கிட்டத்தட்ட அந்த நபரின் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக பாதிக்கப்பட்டவர் தனது டிக்டோக்வில் கூறியிருப்பதையும் போலீசார் அறிந்துள்ளனர்.
விசாரணைக்கு மேற்கொள்ள உதவும்படி சம்பந்தப்பட்ட Tik Tok உரிமையாளரை போலீசார் கேட்டுகொண்டனர். மேலும் அந்த பலுன் விற்பனையாளரின் பாலியல் தொந்தரவுக்கு பொதுமக்களில் எவரேனும் உள்ளாகியிருந்தால் எந்தவொரு போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தால் அது குறித்து விசாரணை நடத்தப்படும் என Zaiham வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.