Latestஉலகம்

பாகிஸ்தானில் கடும் மழை ஒரே நாளில் 63 பேர் மரணம்

இஸ்லாமபாத், ஜூலை 18- பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலம் முழுமையிலும் கடும் மழை பெய்ததைத் தொடர்ந்து ஒரே நாளில் 63 பேர் இறந்ததோடு கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 300 பேர் காயம் அடைந்தனர்.

கடந்த ஜூன் மாதத்திலிருந்து பெய்துவரும் கடுமையான மழையினால் நாடு தழுவிய நிலையில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது.

வியாழக்கிழமை பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் கட்டிடங்கள் இடிபாடுகளுக்கு உள்ளாகின.

பலவீனமான வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்ததால் பெரும்பாலான மரணங்கள் ஏற்பட்டன.

Lahoreரில் 15 பேரும் , Faisalabadதில் ஒன்பது பேரும் , விவசாய நகரங்களான Okara, Sahiwal மற்றும் Pakpattanனில் மேலும் பலர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டின் தென் பகுதியில் வெள்ளத்தினால் ஆற்றோரங்களில் பாதிக்கப்பட்ட கிராமங்களிலிருந்து குடியிருப்பு வாசிகளை படகின் உதவியோடு மீட்பு குழுவினர் வெளியேற்றினர்.

வீடுகளில் கூரைகளில் அமர்ந்தபடி சிறார்களும் பெண்களும் உதவி கோரி கூச்சலிட்டடோடு உடனடியாக தங்களை மீட்கும்படியும் கோரிக்கை விடுத்தனர்.

பல இடங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்றுவதற்கு மீட்புக் குழுவினர் தயாராய் உள்ளனர்.

மழையின் காரணமாக பொதுமக்கள் வெளியே எங்கும் செல்லாதபடி அவர்கள் வீடுகளிலேயே இருப்பதற்காக ராவல்பிண்டி அரசாங்கம் நேற்று பொது விடுமுறை  அறிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!