Latestமலேசியா

கூலாய் பொதுக் கழிவறையில் சிறுமியை மானபங்கம் செய்த ஆடவன் கைது

கூலாய், செப்டம்பர்-19,

ஜோகூர், கூலாயில் பொது கழிவறையில் 10 வயது சிறுமியை மானபங்கம் செய்த புகாரில், 32 வயது ஆடவன் கைதாகியுள்ளான்.

Taman Iris, Jalan Jambu Air-ரில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணி வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக, கூலாய் போலீஸ் தலைவர் Tan Seng Lee தெரிவித்தார்.

சிறுமியின் தாத்தாவிடமிருந்து செப்டம்பர் 14-ஆம் தேதி புகார் பெறப்பட்டது.

இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸ், நேற்று மாலை கூலாய் வட்டாரத்தில் சந்தேக நபரைக் கைதுச் செய்தது.

பாலியல் புகார்கள் தொடர்பில் அவனுக்கு ஏற்கனவே 3 குற்றப்பதிவுகள் இருந்ததும் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் அவனை விசாரணைக்கு தடுத்து வைக்க ஏதுவாக இன்று நீதிமன்ற ஆணைப் பெறப்படுமென Tan Seng Lee கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!