
கோலாலம்பூர், ஜூலை 10 – Pasar Pekan Ampang மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிடிக்கப்படும் ஒவ்வொரு எலிக்கும் மூன்று ரிங்கிட் வழங்குவதற்கு MPAJ எனப்படும் அம்பாங் ஜெயா நகரான்மைக் கழகம் முன்வந்துள்ளது.
எலிகளை பிடித்தவர்களுக்காக வெகுமதி கட்டணம் ஜூலை 8ஆம் தேதி முதல் ஜூலை 25 ஆம் தேதிவரை Pasar Pekan Ampang கில் காலை 9.30 மணி முதல் நண்பகல் 12 மணிவரை செயல்படும் முகப்பிடத்தில் வழங்கப்படும் என அம்பாங் ஜெயா நகரான்மைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
எலிகளைப் பிடிக்கும் நடவடிக்கையில் Pekan Pasar Ampang மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் கலந்துகொள்ளலாம் . அம்பாங் வட்டாரத்தின் சுற்ற வட்டாரத்தில் தூய்மையை உருவாக்கும் முயற்சியில் மக்களும் பங்கேற்பதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் எலிகளை துடைத்தொழிக்கும் நடடிக்கை மேற்கொள்ளப்படுகிறது