ஜார்ஜ்டவுன், செப்டம்பர் 24 – பினாங்கில் மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எண்ணெயின் கையிருப்பு போதுமானதாக இருப்பதாக, பினாங்கின் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக, பினாங்கில் சமையல் எண்ணெயின் கையிருப்பு குறைவாக உள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவலும், பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற புகார்களைத் தொடர்ந்தும், அவ்வமைச்சு இதனைத் தெரிவித்தது.
ஜனவரி 1 முதல் செப்டம்பர் வரை மாநிலம் முழுவதும் மொத்தம் 37,705 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் பாக்கெட் சமையல் எண்ணெய்கள் போதுமானதாக இருப்பதும் கண்டறியப்பட்டது என அதன் இயக்குநர் எஸ்.ஜெகன் தெரிவித்தார்.
விநியோக நிலைமையைக் கண்காணிக்கவும், பரிவர்த்தனைகளில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்யவும், மாநிலத்தில் 134 சட்ட அமலாக்க அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக அதன் இயக்குநர் எஸ் ஜெகன் கூறினார்