Latestமலேசியா

பிப்ரவரி 1 முதல் கோலாலம்பூரில் 3 மில்லியன் வாகனங்கள் நுழைந்தன; அதுவே மோசமான நெரிசலுக்குக் காரணம் – போலீஸ்

பிப்ரவரி 1 முதல் கோலாலம்பூரில் 3 மில்லியன் வாகனங்கள் நுழைந்தன; அதுவே மோசமான நெரிசலுக்குக் காரணம் – போலீஸ்

கோலாலம்பூர், பிப்ரவரி-14,

பிப்ரவரி 1 முதல் 12 வரை, 3 மில்லியனுக்கும் மேற்பட்ட வாகனங்கள் கோலாலம்பூரில் நுழைந்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

சீனப்புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வருவது காரணமாக கடந்த வாரம் இந்த கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக அது கூறியது.

அதோடு, தேசிய நிகழ்வுகள், விபத்துகள், மற்றும் மோசமான வானிலை நிலையும் நெரிசலை அதிகரித்தன.

இதற்கு தீர்வாக, போலீஸார் ‘Op Selamat 25’ சோதனை நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து பேரங்காடிகள், மாநகரங்களுக்குள் நுழையும் பாதைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உச்ச நேரத்தைத் தாண்டியும் போக்குவரத்து கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்தை சுமூகமாக்க, கோலாலம்பூர் மாநகர மன்றமும சாலை சமிக்கை விளக்கு நேரங்களை மாற்றியுள்ளது.

விபத்துகள் நடந்தால் உடனடியாக அகற்றுவதற்காக அவசர குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில் ஓட்டுநர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், பயணத்தை முன்கூட்டியே திட்டமிடவும், அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!