
கோலாலம்பூர், மார்ச் -4- இன்று மார்ச் 4ஆம் தேதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு டத்தோஸ்ரீ உத்தாமா ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் ( Tenku Datuk seri utama Zafrul Aziz)
அவர்களை நியமிக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புக்கொண்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரதமரின் மூத்த அரசியல் செயலாளர் பதவியின் காலியிடத்தை நிரப்புவதற்காக இந்த நியமனம் செய்யப்பட்டது.
நாட்டின் சுபிட்சம் மற்றும் மக்களின் நல்வாழ்வுக்காக தெங்கு டத்தோஸ்ரீ உத்தாமா Zafrul தனக்கு வழங்கப்பட்ட இந்த நம்பிக்கையை சிறப்பாகவும் பணிவுடனும் நிறைவேற்ற முடியும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.



