Latestஉலகம்

பிலிப்பைன்ஸில் ஹெலிகாப்டர் விபத்து; Farm Fresh இயக்குநர் ஜேக்கப் மதன் மரணம்

கோலாலம்பூர், மார்ச் 4 – பிலிப்பைன்ஸின் ரிசால் மாநிலத்திலுள்ள Pitilla வில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் மலேசியரான Farm Fresh Berhad ட்டின் பண்ணை இயக்குனர் ஜேக்கப் மதன் ( Jocob Mathan ) மரணம் அடைந்தார்.

ஹெலிகாப்டர் பண்ணை இடத்திற்கு சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட இயந்திரக் கோளாறினால் விபத்திற்குள்ளானதாக Farm Fresh Bhd ட்டின் அதிகாரப்பூர்வ முகநூலில் வெளியிடப்பட்ட ஒரு கடிதத்தில் அந்த குழுமத்தின் நிர்வாக இயக்குநர் Loi Tuan Ee தெரிவித்தார்.

35 வயதான ஜேக்கப், 13 ஆண்டுகளுக்கு முன்பு Farm Fresh குடும்பத்தில் பல்கலைக்கழக பயிற்சியாளராக இணைந்த பின் , வலுவான பொறுப்புணர்வு மற்றும் கற்றுக்கொள்ளும் சிறந்த திறனைக் காட்டினார்.

நல்ல உற்சாகம், செயல் மற்றும் பேச்சில் கனிவானவராகவும் விளங்கி வந்த , Jocob Mathan, Farm Fresh நிறுவனத்தின் குடும்பத்தில் யாருடனும் ஒருபோதும் எந்த வெறுப்பையும் காட்டாத ஒரு மகிழ்ச்சியான நபராக திகழ்ந்தார் என Loi Tuan Eee வருணித்தார்.

ஹெலிகாப்டரில் பயணம் செய்த பிலிப்பின்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Shawn Pu இந்த விபத்தில் காயம் அடைந்த போதிலும் அவரது நிலைமை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஜேக்கப் மதனுக்கு மனைவியும் குடும்பமும் உள்ளனர். தனிப்பட்ட முறையில் அவரது மரணம் தங்களது நிறுவனத்திற்கு பெரிய இழப்பு என்பதோடு அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்வதாக Loi Tuan Eee குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!