Latestமலேசியா

புக்கிட் ஜாலிலில் ஆண்கள் கழிவறையில் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்த சீன நாட்டு ஆடவன் கைது

புக்கிட் ஜாலில், மார்ச்-29-கோலாலம்பூர், புக்கிட் ஜாலிலில் உள்ள பேரங்காடி ஒன்றின் ஆண்கள் கழிவறையில், இன்னோர் ஆணை இரகசியமாக வீடியோவில் பதிவுச் செய்ததாக சந்தேகிக்கப்படும் சீன நாட்டு ஆடவர் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் வியாழக்கிழமை போலீஸ் புகார் செய்ததை அடுத்து விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

காலை 11 மணி வாக்கில், நான்காவது மாடியில் இருந்த ஆண்கள் கழிவறையைத் தாம் பயன்படுத்தி கொண்டிருந்த போது, பக்கத்து அறையிலிருந்து ஓர் ஆடவர் கைப்பேசியில் தம்மை வீடியோ எடுப்பதை கண்டு புகார்தாரர் அதிர்ந்துபோனார்.

இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸ், 20 வயதிலான சந்தேக நபரை அன்றைய தினமே கைதுச் செய்தது.

திருட்டுத்தனமாக வீடியோ எடுத்ததை அவன் ஒப்புக் கொண்டான்.

அவனது கைப்பேசியை வாங்கி பரிசோதனை செய்ததில், ஏராளமான ஆபாச வீடியோக்களும் கண்டறியப்பட்டன.

கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணைக்காக 1 வாரம் அவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!