
கோலாலம்பூர், மார்ச் -3- சுங்கை பூலோ மற்றும் டாமன்சாரா டமாய் நிலையங்களுக்கு இடையிலான புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தில் பாதையில் மின் தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று நாள் முழுவதும் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாமன்சாரா டமாய் நிலையத்திற்கு அருகில் கேபிள் எனப்படும் மின் இணைப்பு கம்பிகள் திருட்டு நடந்ததாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், இதனால் கடுமையான இடையூறு ஏற்பட்டதாகவும், பெரிய அளவிலான பழுதுபார்க்கும் பணிகள் தேவைப்படுவதாக ரேபிட் ரெயில் தெரிவித்துள்ளது.
புத்ராஜெயா சென்ட்ரலில் இருந்து மெட்ரோ பிரைமாவில் ( Metro Prima ) திரும்பும் ரயில்கள், மெட்ரோ பிரைமா மற்றும் டாமன்சாரா டமாய் இடையேயான ஷட்டில் ரயில்கள் மற்றும் குவாசா (Kwasa ) டாமன்சாராவிலிருந்து வரும் ரயில்கள் டமான்சாரா டமாய்யில் (Damansara Damai) திரும்பும் ரயில்கள் உள்ளிட்ட மாற்று ரயில் சேவைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
பயணிகள், குறிப்பாக மெட்ரோ பிரைமா மற்றும் டாமன்சாரா டமாய் இடையே, அதிக நேரம் காத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதவி போலீசார் மற்றும் எம்.ஆர்.டி நிலையத்தின் பணியாளர்கள் உதவிக்கு நிறுத்தப்பட்டுள்ளதோடு பொதுமக்கள் மாற்று போக்குவரத்தை கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.



