
புந்தோங், அக்டோபர்-6,
தீபாவளி பெருநாளை முன்னிட்டு மடானி காசே அன்பளிப்புத் திட்டம், ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதியில் இனிதே நடைபெற்றது.
புந்தோ, கெப்பாயாங், பெர்ச்சாம் ஆகிய 3 சட்டமன்றங்களை உள்ளடக்கிய அத்தொகுதியைச் சேர்ந்த சேர்ந்த படிவம் 4, 5 மற்றும் 6 இல் உள்ள இந்திய மாணவர்களுக்காக, புந்தோங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலத்தில் அந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துள்சி மனோகரனின் சேவை மையத்தின் ஏற்பாட்டில் இவ்விழா நடைபெற்றது.
தீபாவளியுடன் இணைந்து கல்வி உதவியாக அப்பகுதியைச் சேர்ந்த 625 இந்திய மாணவர்களுக்கு மொத்தம் RM250,000 ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வுக்கு, கெப்பாயாங் சட்டமன்ற உறுப்பினரும், தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினரும், வீடமைப்பு – ஊராட்சித் துறை ங்கா கோர் மிங் தலைமை தாங்கினார்.
அவர் மாணவர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கினார்.
அந்நிகழ்வில், புந்தோங் மாரியம்மன் கோயில் மண்டபத்தை தரமுயர்த்தும் பணிகளுக்கு, 100,000 ரிங்கிட் மானியத்தையும் அவர் அறிவித்தார்.
தமதுரையில், மடானி அரசாங்கம் மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை சமப்படுத்த தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்றும் ங்கா கோர் மிங் உறுதியளித்தார்.



